பக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…!

1
1172

(Stroke Cancer Cure Healthy Tips)
கோடைகாலம் வந்து விட்டாலே நாம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. தர்பூசணி தாகத்தை தணிக்கும். ஆனால், அதில் உள்ள சத்துக்கள் தீவிர நோய் வராமல் தடுக்கும் என பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆமாங்க நாம் மிகவும் பயப்படக்கூடிய நோயான புற்று நோயே வராமல் தடுக்கிற சக்தி கொண்டுள்ளது தர்பூசணி.

கேன்சர் என்பது நமது உடலில் உள்ள செல்கள் அசாதாரணமாக எண்ணிக்கையில் அதிகரிப்பதே ஆகும். இந்த செல்கள் வளர்ச்சி பெற்று டியூமரை உண்டாக்குகிறது. இந்த டியூமர் நமது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை அழித்து விடுகின்றன. இதனால் இறப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய வகையான கேன்சர்கள் உள்ளன. மார்பக புற்றுநோய், இரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பிரைன் டியூமர் போன்றவைகள் அவற்றில்  சில .

அடுத்து கவனிக்க வேண்டியது மிகப்பெரும் பிரச்சினை பக்கவாதப் பிரச்சினை. இதனால் மூளை பாதிப்படையும். இதற்கு காரணம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதாலும் இரத்தம் கட்டுவதாலும் ஏற்படுகிறது. எனவேதான் பக்கவாதம் வந்தவர்களுக்கு  தங்களது கை, கால் மற்றும் உடம்பை அசைக்க முடியாமல் போகிறது.

அவர்களது வாழ்க்கையும் ஓய்விலேயே நகர்கிறது. எனவே இந்த கொடூரமான விளைவுகளை உண்டாக்கும் இந்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதுதான் சிறந்தது.

இந்த இரண்டு நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தர்பூசணி பயன்படுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் நோய்க்கு எதிரான மாற்றத்தை உண்டு பண்ணுவதே ஆகும். எனவே இந்த தர்பூசணியைப் பானமாக செய்து குடித்து வந்தால் அதில்  கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
* தர்பூசணி ஜூஸ் – 1 டம்ளர்
* லெமன் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* தேவையான அளவு லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அதனுடன் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.

* நன்றாக கலந்து உள்ள இந்த ஜூஸை ஒருநாள் விட்டு ஒருநாள் காலை உணவிற்கு முன்னாடி குடித்தால் தீவிர நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு நீண்ட காலம் வாழலாம்.

* தாகத்தை தணிக்கும் தர்பூசணியை பயன்படுத்தி கேன்சர் மற்றும் பக்கவாதத்தை தடுத்து ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள்.

இதன் நன்மைகள் :
* தர்பூசணி பழத்தில் உள்ள லைகோபீன் என்ஜைம் மூளையில் இரத்தம் கட்டுவதை தடுத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

* மேலும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது.

* இதனால் பக்கவாதம் நம்மை அண்டாது.

* இந்த லைகோபீன் நமது உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தடுக்கிறது.

* இதனால் புற்று நோய் ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.

புற்று நோய் :
இதில் பயன்படுத்தப்படும் லெமன் ஜூஸியில் உள்ள விட்டமின் சி யும் உடம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் உடம்பில் பெருகும் செல்களின் எண்ணிக்கை வளர்ச்சியை தடுத்து கேன்சர் வராமல் தடுக்கிறது. இரத்தம் கட்டுவதை தடுப்பதால் மூளைக்கு இரத்தம் எந்த இடையூறு இல்லாமல் செல்வதற்கு வழிவகை செய்கிறது. எனவே பக்கவாதத்தினால் ஏற்படும் அசைக்க முடியாத நிலை மாறுகிறது.

உணவில் இந்த முறைகளை கடைபிடியுங்கள்:
ஆரோக்கியமான உணவை சாப்பிடுதல், கொழுப்பு உணவுகளை தவிர்த்தல், ரெட் மாமிசம் தவிர்த்தல் , குடிப்பழக்கம் தவிர்த்தல், புகைப்பிடித்தல் கூடாது, மன அழுத்தம் குறைத்தல் போன்றவற்றை கடைப்பிடித்து இதனுடன் நல்ல உடற்பயிற்சியும் மேற்கொண்டால் கேன்சர் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்.

 

<<தமிழ் ஹெல்த் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>

மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!

உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!

 
<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

 Web Title : Stroke Cancer Cure Healthy Tips