இலங்கை தமிழ்ரசு கட்சியின் மறைத்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் பதிவில்,
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித்தலைவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.