கொழும்பு புறக்கோட்டை கோல்ட் மார்கட் அருகில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும் தீ ஏனைய இடங்களுக்கு பரவவில்லை என்றும் அங்கு சென்ற எமது செய்தியாளர் அறிவித்தார்.
