(samsung galaxy S10 plus might 5 cameras)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S10 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி S10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமராக்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இவற்றில் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வேடு-ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி S9 பிளஸ் மாடலில் சாம்சங் 12 MP வைடு-ஆங்கிள் கேமரா, 12 MP டெலிஃபோட்டோ கேமரா வழங்கியிருக்கும் நிலையில், இந்த மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இதேபோன்ற கேமரா அமைப்புடன் 16 MP அல்ட்ரா-வைடு-ஆங்கில் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.