வாடா வா…. மெட்டா நிறுவன தலைவரை கூண்டு சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்!

0
200

டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க்கும் கூண்டுச் சண்டையில் மோதுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டரும் பேஸ்புக்கும் உலகின் முன்னிலை சமூக வலைத்தளங்கள் எனினும் ஒன்று ஒன்று போட்டி நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரர்களான் இலோன் மஸ்க்கும், மார்க் ஸக்கர்பேர்கும் அரசியல், செயற்கை நுண்ணறிவு உட்பட பல விடயங்களில் எதிரெதிரான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருபவர்கள்.

வாடா வா.... மெட்டா நிறுவன தலைவரை கூண்டு சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்! | Wada Wa Elon Musk Calledcage Fight Meta Leader

தற்காப்புக் கலைப் போட்டிக்கு அழைத்த எலான் மஸ்க்

இந்நிலையில் இவர்கள் நேரடியாக தற்காப்புக் கலைப் போட்டியொன்றில் மோதுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை மெட்டா நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இத்திட்டத்துக்கு ‘P92’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எலோன் மஸ்க் ஸக்கர்பேர்குக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

வாடா வா.... மெட்டா நிறுவன தலைவரை கூண்டு சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்! | Wada Wa Elon Musk Calledcage Fight Meta Leader

இது தொடர்பில்  டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ”ஸக்கர்பெர்க், ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலையை பயின்றவர். சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்’ எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை எச்சரித்தார்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்த இலோன் மஸ்க் ‘அவர் (மார்க் ஸக்கர்பேர்க்) ஒரு கூண்டுச் சண்டைக்கு நான் தயார்’ என பதிவிட்டார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், ‘இடத்தை தெரிவிக்கவும்’ எனக் குறிப்பிட்டார்.

இடம் குறித்த ஸக்கர்பேர்க்கின் கேள்விக்கு பதிலளித்த இலோன் மஸ்க், வேகாஸ் ஒக்டகன்’ எனத் தெரவித்துள்ளார்.

ஓக்டகன் என்பது நெவாடா மாநிலத்தின் லாஸ் வேகாஸ் நகரிலுள்ள தற்காப்புகலை போட்டிக் களமாகும். சற்றிவர வேலியைக் கொண்ட இந்த போட்‍டி மேடையானது அமெரிக்காவின் யூஎவ்சி (UFC) போட்டிகளை நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

வாடா வா.... மெட்டா நிறுவன தலைவரை கூண்டு சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்! | Wada Wa Elon Musk Calledcage Fight Meta Leader

இதேவேளை, 52 வயதான தனது பிள்ளைகளை மேலே தூக்கி எறிந்து பிடிப்பதைத் தவிர வேறு உடற்பயிற்சிகளை தான் செய்வதில்லை என மஸ்க் தெரிவித்துள்ளார்.

39 வயதான மார்க் ஸக்கர்பேர்க், எம்எம்ஏ எனும் கலப்பு தற்காப்புக் கலை பயிற்சிகளில் ஈடுபடுபவர். அண்மையில் சுற்றுப்போட்டியொன்றில் தான் பதக்கம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் , இருவரின் கூண்டுச் சண்டையை காண உலகமே ஆவலாக உள்ளது.