ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு

0
87
Kamal Hassan Announces Tours starts January 26

(Kamal Hassan Announces Tours starts January 26)

எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி தொடக்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக உள்ளார்.

புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, அவர் கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன், கொல்கத்தாவிற்கு சென்ற கமல்ஹாசன், மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7-ம் திகதி கமல்ஹாசன் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘கையடக்க தொலைபேசி செயலி’ ஒன்றை ஆரம்பித்தார்.

அப்போது, அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்து அறிவிப்பேன்.

இதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்வேன் என அறிவித்தார்.

இந்த நிலையில், ஜனவரி 26-ம் திகதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், இது பற்றி தெரிவித்தார்.

சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

(Kamal Hassan Announces Tours starts January 26)

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here