மதுபானங்கள் விற்பனை தொடர்பான நிதியமைச்சின் அறிவித்தல் ரத்து

0
2617
Disclosure Finance Ministry proposal sale alcoholic beverages

(Disclosure Finance Ministry proposal sale alcoholic beverages)

மதுபானங்களை விற்பனை செய்தல், பெண்கள் மதுபான சாலைகளில் கொள்வனவில் ஈடுபடுதல் மற்றும் பணிபுரிதல் தொடர்பாக நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நாளை (15) தொடக்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மதுபானங்களை விநியோகித்தல் மற்றும் மதுபானசாலைகளில் பெண்கள் பணிபுரிதல் போன்ற விடயங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அண்மையில் நிதியமைச்சு அகற்றியிருந்தது.

அத்துடன், மதுபான சாலைகள் மற்றும் விருந்தகங்களின் மதுபானங்களை விற்பனை செய்யும் நேரத்தையும் நீடித்து திருத்தங்களை மேற்கொண்டிருந்தது.

குறி்த்த திருத்தங்கள் தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவற்றை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்தி்ப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

(Disclosure Finance Ministry proposal sale alcoholic beverages)

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here