சட்ட விரோத கருக்கலைப்பு…! விமானநிலையத்தில் இருவர் கைது

0
21
2 suspects were arrested Katunayaka airport

(2 suspects were arrested Katunayaka airport)

சட்ட விரோத போதைப்பொருள் மாத்திரைகள் 4,000 மற்றும் 1,260 கருக்கலைப்பு மாத்திரைகளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4,000 எபல் போதைப்போருள் மாத்திரைகள் , 1,260 கருக்கலைப்பு மாத்திரைகள் (Contirakit), 50 மாவா எனும் போதைப்பொருள் அடங்கிய தகரங்கள் மற்றும் விற்றமின் D உள்ளடங்கிய சிறிய போத்தல்கள் 90 ஆகியவற்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் இன்று (14) காலை 8.30 மணியளவில் விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், குறித்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஹெந்தளை, வத்தளை பகுதியைச் சேர்ந்த 62, 27 வயதுடைய இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நாளைய தினம் (15) மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கட்டுநாயக்க பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here