ரஜினியின் பாபா முத்திரை எங்களுடையது : சர்ச்சையை கிளப்பும் நிறுவனம்

0
46
Rajinikanths Baba gesture similar to our logo

(Rajinikanths Baba gesture similar to our logo, may create confusion if made party symbol)

ரஜினிகாந்தின் பாபா முத்திரை தங்களுக்குச் சொந்தமானது என்று மும்பை ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று உரிமை கோரியுள்ளது.

யோகாவின் ‘ஆபன முத்திரை’ ரஜினி நடித்த ‘பாபா’ படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானது. சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பின்போது அந்த முத்திரையை முதன்மைப்படுத்தினார் ரஜினி.

தற்போது அவர் தனது அரசியல் வருகை குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள சூழ்நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றையும் அவர் உருவாக்கியுள்ளார்.

அதே நேரத்தில் அரசியல் களத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ள ரஜினி, தனது கட்சியின் பெயர், கொள்கை, சின்னம் ஆகியவை குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இதனையடுத்து ‘பாபா’ முத்திரையே அவர் கட்சியின் சின்னமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒன்றரை வருடத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட மும்பை சமூக ஊடக செயலி நிறுவனமான ‘வோக்ஸ்வெப்’, ரஜினியின் முத்திரை தங்களுடைய சின்னம் என்று உரிமை கோரியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் நிறுவனர் யாஷ் மிஸ்ரா, ”ஒரே சின்னத்தை வேறு நிறுவனமோ அல்லது பிராண்டோ வைத்திருந்தால் அது பெரிய பிரச்சினையல்ல. ஆனால் சமூக ஊடங்களும் அரசியல் கட்சிகளும் பிரத்யேகமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

அவற்றுக்கு பெரிய மக்கள் கூட்டம் உண்டு. அவை ஒரே மாதிரியான சின்னங்களைப் பயன்படுத்துவது குழப்பத்தை உருவாக்கும்.

அவரின் முத்திரையும் எங்கள் சின்னமும் கட்டை விரலில் மட்டுமே சிறிய மாற்றத்தைக் கொண்டுள்ளது. இதனால் எங்களின் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் நாங்கள் ரஜினிகாந்தை ஆதரிக்கிறோமா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினிக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும், அதற்கு பதில் எதுவும் வரவில்லை என்றும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Most Red Stories 

Our Other websites 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here