போராட்டத்தின் விளைவாகவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார் – ரோஹித அபேகுணவர்தன

0
152

போராட்டத்தின் விளைவாகவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார் எனவும், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போராட்டத்தைக் கண்டு அஞ்சியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்த தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்து கருத்துரைக்கையில்;

69 இலட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் ஜனாதிபதி, குறைந்தபட்சம் ஒரு இலட்சம் பேராவது ஒண்றிணையாத போராட்டத்தைக் கண்டு அஞ்சி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரினார்.

இந்த நாட்டில் மிகப்பாரிய அளவிலான சேவைகளை வழங்கிய தலைவர் ஒருவர் இருப்பாராயின் அது மஹிந்த ராஜபக்ஷவே ஆகும். அவர் எமது கட்சியின் தலைவரும் ஆவார்.

முன்னதாக மக்கள் ‘மஹிந்த கோ ஹோம்’ என கூறவில்லை. ‘கோட்டா கோ ஹோம்’ என்றே கூறினார்கள். பின்னரே ‘மஹிந்த கோ ஹோம்’ என்ற கோசம் உருவாக்கப்பட்டது.

ஆகவே, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை எனவும், அமைச்சரவையில் இருந்து நாம் விளக்குவதாகக்கூறி, கடிதத்தை கையளித்தோம்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா மற்றும் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

இருப்பினும், எவரும் முன்வரவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பிரதமராக பதவிவகிக்க முன்வந்தார். தொடர்ந்து அவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையாக ஏற்றுக்கொண்டது.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கு சர்வதேச நாடுகளின் செல்வாக்குமிக்க ஒருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே காணப்பட்டார். அதனால் அவரிடம் பொறுப்பை கையளித்தோம்.

மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் வகையிலே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய பிரயத்தனத்தை மேற்கொண்டது.

இதற்கான வகைக்கூறலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய முறையில் மேற்கொள்ளத் தவரும் பட்சத்தில், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவே இருக்கின்றது” எனது தெரிவித்தார்.