அவுஸ்திரேலிய விபத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் உயிரிழப்பு! 90 வயது பெண் ஏன் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டார்..சர்ச்சை!

0
590

அவுஸ்திரேலியாவில் விபத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் 90 வயது பெண் ஏன் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டார் என குடும்பத்தார் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயிரிழந்த இலங்கை சிறுவன்

12ஆம் ஆண்டு மாணவரான கல்வின் விஜிவீர (17) கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதையடுத்து அவர் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.

இது குறித்து பேசிய கல்வின் சகோதரி ஒவிடி விஜிவீர கூறுகையில், நான் கூறவருவது வெறுப்பு உணர்வுகள் அல்ல, 90 வயதான ஒரு பெண்ணை எப்படி வாகனம் ஓட்ட அனுமதிக்க முடியும்? நியூ சவுத் வேல்ஸில், 75 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை வைத்திருக்க ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

ஓட்டுனர் தேர்வில்

85 வயதுக்கு பிறகு அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஆன்-ரோடு’ ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கூறினார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் உயிரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி? குடும்பத்தார் எழுப்பிய கேள்விகள் | Australia Srilanka Boy Dies Family Questions

இந்த விபத்தையடுத்து 90 வயது பெண்ணிற்கு காலில் காயம் ஏற்பட்டது, மேலும் கட்டாய பரிசோதனைக்காக வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அதன் முடிவுகள் திரும்பி வர வாரங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.