இலங்கையில் கொவிட் நோய் திடீர் எழுச்சி – பின்னணியில் அரசியல் சூழ்ச்சி

0
506

இலங்கையில் கட்டுப்பாட்டில் இருந்த கொவிட் தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதுடன் ஒரே நாளில் 5 மரணங்களும் சம்பவித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடக்குமுறையான ஆட்சி காரணமாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் 9ஆம் திகதி அவரை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னனி மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் ஜனாதிபதி ரணிலின் கோரிக்கைக்கு அமைய மீண்டும் கொவிட் வைரஸ் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் நாட்டில் கொவிட் முடக்கநிலை கூட அமுல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுகாதார அமைச்சு மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன. மக்களின் போராட்டங்கள் தீவிரம் அடைந்தால் முடக்கநிலை உடன் அமுலுக்கு வரும். ஏற்கனவே நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கொவிட் தொற்றின் மிகைப்படுத்தல் நாடகமும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் இன்று ஜனாதிபதியாக சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள ரணில் விக்ரமசிங்க தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள எந்த மட்டத்திற்கும் செல்லக் கூடியவர் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.