வீட்டுச் சிறையில் முன்னால் ஜனாதிபதி!

0
536

சவுதி அரேபியாவில் ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அதமன்சூர் ஹாதி, வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் எனத்  தகவல் வெளியாகி உள்ளது.

ஏமனில் அந்த நாட்டு அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகின்றது.

இப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியா முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், கடந்த 7ஆம் திகதி ஏமனின் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அத்துடன் 8 அரசியல் தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய ஜனாதிபதி கவுன்சிலுக்கு தனது அதிகாரத்தையும்  அவர் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மன்சூர் ஹாதி தனது பதவியை இராஜினாமா செய்ததாகவும், தற்போது அவர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக சவுதி அரேபியா அதிகாரிகள் மன்சூர் ஹாதியின் ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டியே அவரைப் பதவி விலக வைத்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.