மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது!

0
462

வவுனியா நகர் பகுதியில் இருந்து யாழ் வீதியினூடக பயணித்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமைடந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.