வத்தலகுண்டு மதிமுக நகர செயலாளர் தாவூத் இல்லத்தின் திருமண விழாவில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.Secret counseling Governor’s House – Expose Vaiko india tamil news
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ :
”ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எப்படி வழக்கை வேறு மாதிரி போட்டு, நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
நான் எந்த வழக்கறிஞர் என்று சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல் அமைச்சரையும் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்.
நான் தமிழக ஆளுநருக்கும் சொல்லிக்கொள்கிறேன். தமிழக அரசுக்கும் சொல்லிக்கொள்கிறேன். நக்கீரன் ஆசிரியர் கோபால் தனி மனிதரல்ல.
பத்திரிகைகளின் பிரதிநிதி. தொலைக்காட்சி, ஊடகங்களின் பிரதிநிதி. பத்திரிகை குரல் வலையையோ, ஊடக, தொலைக்காட்சி குரல் வலையையோ நெரிக்க முயன்ற உங்களைவிட சகல வல்லமைபெற்ற சர்வாதிகார பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாக போயிருக்கிறார்கள்.
இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்”. இவ்வாறு கூறினார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி