அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ். தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. (Sri Lankan arrested Australia ISIS links faizer mustapha son in law)
அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மொகமட் நிசாம்டீன் என்ற 25 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞன், சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
கலாநிதிப் படிப்புக்காக அவுஸ்ரேலியா சென்ற இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று கென்சிங்டனில், தீவிரவாத முறியடிப்பு கூட்டு பிரிவினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது மடி கணினி இவர் தாக்குதல் இலக்குப் பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தார் என்றும் அதில், அவுஸ்ரேலியாவில் பிரதமராக இருந்த மல்கம் ரேன்புல் மற்றும் முன்னாள் பிரதமரும்,
வெளிவிவகார அமைச்சராக இருந்தவருமான ஜூலி பிஷப் ஆகியோரின் பெயர்களும் அடங்கியுள்ளன என்று அவுஸ்ரேலிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, ஒரு தொகுதி இலத்திரனியல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பேட்டில், இலக்கு வைக்கப்படக் கூடியவை எனக் கருதப்படும் சில இடங்களும் குறிக்கப்பட்டிருந்தன.
இவை சிட்னியில் முக்கியமான இடங்கள் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்குள் கல்வி நுழைவிசைவின் மூலம் பிரவேசித்த சந்தேக நபர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருக்கிறார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி இலங்கையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்
- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- நான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு
- ஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்
- ஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்
- திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
- அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamil News
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags;Sri Lankan arrested Australia ISIS links faizer mustapha son in law,Sri Lankan arrested Australia ISIS links faizer mustapha son in law