இரட்டை அர்த்த பாடல்களை பேரூந்தில் ஒலிபரப்ப தடை – விக்கினேஷ்வரனின் அதிரடி நடவடிக்கை

0
479
north province chief minister vickneshwaran decide several party contest

வன்முறைகள் அதிகமாக உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை பேருந்துகளில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். double meaning songs cant broadcast passenger bus north chief vickneshwaran

நேற்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 20ஆவது ஆண்டு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் பயணிகளின் நன்மைக்காகவும்;, மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமா படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்கது.

ஆனால் , பாடல்கள் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய அறிவுசார்ந்த பாடல்களாக அமைந்திருப்பதே பொதுவாக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக, இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை ஒலிபரப்புவதை அனைத்து பேருந்து உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து தடுக்கலாம் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தாழம்மிக்க நகைச்சுவைகளுடன் கூடிய பல நல்ல படங்களைக் காட்சிப்படுத்துவதையே மக்கள் விரும்புகின்றார்கள்.

படங்களையும், பாடல்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, பொறுப்புள்ளவர்களிடம் வழங்கினால் பேரூந்தில் பயணம் செய்பவர்கள் வெட்கப்படத் தேவையில்லை என்று தாம் கருதுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
double meaning songs cant broadcast passenger bus north chief vickneshwaran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites