இன்று! (Today Horoscope 09-08-2018)
இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 26ம் தேதி,
9.8.18 வியாழக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 9:13 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:54 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:28 வரை, மரண, அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : மாதசிவராத்திரி, பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு.
.
மேஷம்:
இஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்களால் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர்.
ரிஷபம்:
மற்றவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.தொழிலில் இலக்கை அடைய அதிக நேரம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். .
மிதுனம்:
பேச்சு, செயல்களில் புத்துணர்வு வெளிப்படும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி வந்து சேரும். பெண்கள் உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வர். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
கடகம்:
நல்லவர்களின் ஆலோசனையை பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரம சூழ்நிலை சரியாகும். புதிய இனங்களில் திடீர் செலவு ஏற்படலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது.
சிம்மம்:
நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும்.உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
கன்னி:
உங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். சிறுஅளவில் கடன் பெறுகிற சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் அறிவுப்பூர்வமான செயல் மனதை மகிழ்விக்கும்.
துலாம்:
எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனு கூலத் தன்மையை பாதுகாத்திடுவீர்கள். சேமிப்புப் பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
விருச்சிகம்:
உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பேச்சில் உற்சாகம் நிறைந் திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
தனுசு:
திட்டமிட்ட செயல்களில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
மகரம்:
உறவினரின் கூடுதல் பாசம் வியப்பைத் தரலாம். எதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
கும்பம்:
அவசரப்பணியால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் முயற்சியும் உழைப்பும் உதவும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்வது கூடாது.
மீனம்:
மற்றவரின் அறிவுரையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் பதவி பெறும் முயற்சியில் ஈடுபடுவர்.
மேலும் பல சோதிட தகவல்கள்
-
உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
-
பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
-
பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
-
வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
-
இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
-
காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
-
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
-
உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
-
வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்