வடகிழக்கில் முகாம்களை மூடும் நோக்கமில்லை! இராணுவத்தளபதி திட்டவட்டம்!

0
466
No Idea Close North East Army Camp SL Army Commander Said

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் பெருமளவு முகாம்களை மூடவுள்ளதாக, சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நிராகரித்துள்ளார். No Idea Close North East Army Camp SL Army Commander Said

மேலும் வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்றும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு முடிவையும், எந்தவொரு சூழ்நிலையிலும், சிறிலங்கா இராணுவம், எடுக்காது. தேசிய பாதுகாப்பு கரிசனைகளுக்கே முன்னுரிமை கொடுக்கும்.

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில், முழு நேரமும் சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.

போரின் போது, சிறிலங்கா இராணுவம் கட்டமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டதன் மூலம் போரில் வெற்றியைப் பெற்றது.

அதுபோல, தற்போதைய அரசாங்கத்தின், தேசத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களில் சிறிலங்கா இராணுவம் மகத்தான பங்களிப்பை வழங்குகிறது.

எனினும், நாட்டின் எதிர்காலத்துக்கான சிறிலங்கா இராணுவத்தின் இந்த அர்ப்பணிப்பு தொடர்பாக, சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொய்யானதும், மலினத்தனமானதுமான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

இராணுவத்தின் “சரியான அளவைப் பேணும்” செயல் முறை, போரின் போது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதோ அதுபோலவே போருக்குப் பின்னரும், செயற்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், பிரதானமாக, முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்ட படையினர் விடுவிக்கப்பட்டு, அவர்களின் வினைத்திறனை இரட்டிப்பாக்கும் வகையில், சிறந்த உற்பத்தித் திறனை ஏற்படுத்தும் களப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ள பெரும்பாலான படையினர், அவசர இடர்கால தேவைகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த செயல்முறைகளுக்காக எந்தவொரு இராணுவ முகாமையும் மூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும் அடிப்படை ஆதாரமற்ற பொய்யான ஊடக செய்திகளால், பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்றும் சிறிலங்கா இராணுவ தளபதி கோரியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites