IPL சட்டவிரோத ஒளிபரப்பு; நடிகை தமன்னாவுக்கு சைபர் பொலிஸார் அழைப்பு: கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
43

கடந்த 2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கும் தமன்னாவின் நடிப்பில் அடுத்த வாரம் அரண்மனை 4 படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடி வழக்கில் நடிகை தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் நடிகை தமன்னாவுக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் ஏப்ரல் 29ம் திகதி நடிகை தமன்னா இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சைபர் கிரைம் பொலிஸ் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் லியோ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்டத்துக்கு விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், #TamannaahBhatia ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.