பொலிஸார் கட்டுப்பாட்டில் இருந்த பெண் உயிரிழப்பு; பதுளையில் போராட்டம் !

0
217

நாட்டில் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத்தாயின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்நிலையில் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே. கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை பகுதிகளில் உள்ள தோட்டங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

தொலைக்காட்சி நாடக பெண் தயாரிப்பாளரின் வீட்டில் மே 11 அன்று தனது வீட்டில் திருடப்பட்டதாக வெலிக்கடை பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதன்போது முறைப்பாட்டையடுத்து பதுளை தெமோதர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.