அன்று விடுதலைப் புலிகளை விமர்சித்த ‘பொன்னம்பலத்தார்’ இன்று புலிவாலைப் பிடித்திழுப்பது ஏன்?

0
203

‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்’ என்ற கோஷம் பொங்குதமிழ் மேடைகளில் எல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த காலம் போய், ‘விடுதலைப் புலிகளுக்கு நாங்கள்தான் ஏக பிரதிநிதிகள்’ என்று கோஷமிட்டுக்கொண்டு திரிகின்ற ஒரு அரசியல் கட்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் தமது கட்சியே நடாத்தவேண்டும் என்ற ‘அடாத்துக் கருத்தை’ அந்தக்கட்சி அண்மையில வெளிப்படுத்தியிருந்தையும் அறிந்திருப்பீர்கள்.

தேர்தலுக்காகவும், தமிழ் மக்களின் வாக்குகளுக்காகவும் விடுதலைப் புலிகள் பற்றி வாய்கிழியப் பேசித்திரிகின்ற அந்த கட்சி ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை கேவலப்படுத்திப் பேசிய வரலாற்றை பலரும் மறந்துவிட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்த காலப்பகுதியில் அது பற்றிய கருத்து வெளியிட்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் குமார் பொண்ணம்பலம் என்ன கூறியிருந்தார் தெரியுமா?

‘புலிகள் இயக்கம் மீது தடைவிதித்தது பற்றி எனக்கு அக்கறை இல்லை. புலி இயக்கமும் வேறு எவர் தொடர்பாகவும் அக்கறை கொள்வதில்லையே’ எனக் கூறினார்.

‘ஏனைய தனி நபர்கள் மீதோ அனுதாபம் காட்டாத புலிகள் இயக்கம் இந்த நிலையில் எப்படி மற்றவர்களின் அனுதாபத்தை எதிர்பார்க்கமுடியும்?’ என்றும் குமார் பொண்ணம்பலம் கேள்வியெழுப்பியிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கும், அவர்களுடைய தியாகங்களுக்கும், இன்று உரிமைகொண்டாடுகின்ற கட்சியின் உண்மையான முகம் இப்பொழுது தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
Gallery