லென்ஸ் இல்லாத கேமரா! பிரமிக்கவைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்..

0
260

லென்ஸ் இல்லாமல் புகைப்படம் எடுக்கமுடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இப்போது அதுவும் சாத்திமாகிறது. லென்ஸ் இல்லாமல் புகைப்படம் எடுக்கும் கேமரா இதோ!

லென்ஸ் இல்லாத கேமரா!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence-AI) தொடாத இடமே இல்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு மாற்றாக சவால் விட்டுக்கொண்டிருக்கும் AI தொழில்நுட்பம் இப்போது புகைப்படக் கலைஞர்களுக்கு சவால் விடுகிறது. அதாவது கேமராவுக்கு மாற்றாக AI அதன் புதிய எல்லையை தொட்டுள்ளது.

ஆமாம், கேமராக்களுக்கு இனி லென்ஸ் தேவையில்லை. AI தொழில்நுட்பம் லென்ஸ் என்ற பொருளே இல்லாமல் புகைப்பட அனுபவத்தை சாத்தியமாக்குகிறது.

லென்ஸ் இல்லாத கேமரா! பிரமிக்கவைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் | Camera Has No Lens But Uses Ai To Click Pictures

பொதுவாக கேமரா எவ்வாறு செயல்படுகிறது? ஒளியானது லென்ஸ் மூலம் கேமராவிற்குள் நுழைந்து, அது ஒரு ஃபிலிம் கேமராவாக இருந்தால் ஃபிலிம் ஃப்ரேமை தாக்குகிறது அல்லது சென்சார் மீது விழுகிறது.

Paragaphica கேமரா என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?

திறந்த அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்பேஸ் (API) மூலம் இருப்பிடத் தரவைச் சேகரிப்பதன் மூலம் Paragaphica கேமரா செயல்படுகிறது. நாளின் நேரம், முகவரி, வானிலை மற்றும் அருகிலுள்ள இடங்கள் போன்ற தகவல்களைப் பயன்படுத்துகிறது. இந்த அனைத்து விவரங்களையும் இணைத்து, Paragaphica ஒரு பத்தியை உருவாக்குகிறது.

பின்னர், டெக்ஸ்ட்-டு-இமேஜ் AI ஐப் பயன்படுத்தி, கேமரா பத்தியை புகைப்படமாக மாற்றுகிறது. லென்ஸ்கள் கொண்ட பாரம்பரிய கேமராக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் போலவே இதுவும் உள்ளது.லென்ஸ் இல்லாத கேமரா! பிரமிக்கவைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் | Camera Has No Lens But Uses Ai To Click Pictures

லென்ஸ் இல்லாத கேமரா! பிரமிக்கவைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் | Camera Has No Lens But Uses Ai To Click Pictures

லென்ஸ் இல்லாத கேமரா! பிரமிக்கவைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் | Camera Has No Lens But Uses Ai To Click Pictures