மத நல்லிணக்கத்திற்கு அவதூறு; ஜனாதிபதி பணிப்புரை

0
338

மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்தவகையில் மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்

தற்போதைய அரசாங்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தரப்பினர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலக பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மத நல்லிணக்கத்திற்கு அவதூறு; ஜனாதிபதி ரணில் விடுத்த பணிப்புரை | Defamation Religious Harmony Address By President

அத்துடன் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து நாட்டு மக்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய புதிய பொலிஸ் குழு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா எதிரிசூரிய ஆகியோர் மதங்கள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.