மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் இத்தனை கோடிக்கு விற்பனையா!

0
379

லண்டனில் இடம்பெற்ற போன்ஹாம்ஸ் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை விற்பனையில் திப்பு சுல்தானின் வாள் 17.4 மில்லியன் டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் ரூபா 529.03கோடி) விற்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை 23-05-2023 அன்று இந்த விற்பனை இடம்பெற்றுள்ளது.

லண்டனில் மன்னார் திப்பு சுல்தானின் வாள் இத்தனை கோடிக்கு விற்பனையா! | Tipu Sultan S Sword Sold For 529 Crores In London

திப்பு சுல்தான் 1782-1799க்கு இடையில் தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியத்தின் இந்திய முஸ்லீம் மன்னராக இருந்தார். அவர் பொதுவாக “மைசூர் புலி” என்று குறிப்பிடப்படுகிறார்.

மேலும் அவர் தனது போர் கட்டளைகளுக்கு பிரபலமானவர்.

லண்டனில் மன்னார் திப்பு சுல்தானின் வாள் இத்தனை கோடிக்கு விற்பனையா! | Tipu Sultan S Sword Sold For 529 Crores In London

4-05-1799  திகதி திப்பு சுல்தானின் அரண்மனை செரிங்காபட்டத்தில் உள்ள அவரது அரண்மனையை இழந்த பிறகு அவரது அரண்மனையிலிருந்து பல ஆயுதங்கள் அகற்றப்பட்டதாக Bonhams ஏல நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் குறிப்பிடுகிறது.

போருக்குப் பிறகு அவரது தனிப்பட்ட அறைகளில் படுக்கை அறை வாள் கண்டுபிடிக்கப்பட்டது.