இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் ராணி எலிசபெத்; வைரல் வீடியோ!

0
263

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் மர்ம உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செம்படர் மாதம் காலமானார். இதையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார் .

கடந்த 6 ஆம் திகதி பக்கிங்காம் அரண்மனையில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸும் அவரது மனைவி கமீலாவும் முறைப்படி இங்கிலாந்தின் மன்னர் மற்றும் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடந்து செல்லும் மர்ம உருவம்

இந்நிலையில் முடி சூட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டிக் கொள்ளும் போது மர்ம உருவம் ஒன்று நடந்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

அரிவாளைப் போன்ற ஒன்றைச் சுமந்து கொண்டு முகமூடி அணிந்த, கறுப்பு நிற ஆடை அணிந்த உருவம்  தடியை சுமந்துக் கொண்டு செல்கிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மன்னரின் முடிசூட்டு விழாவில் பேய் ஒன்று பங்கேற்றதாக கூறி வருகின்றனர். மேலும் சிலர், மத குருக்களின் உறுப்பினராக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இங்கிலாந்து மன்னர் முடி சூட்டு விழாவிற்கு வந்த மஹாராணி எலிசபெத்; வைரலாகும் காணொளி! | A Ghost Coronation King Of England Viral Video

அதோடு சிலர் இது மஹாராணி எலிசபெத்தா எனவும் கூறிவருகின்றனர்.

ஆனாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் இது அமானுஷ்யம்தான் என கூறி வருகின்றனர். இந்த காணொளியை இதுவரை 3.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.