இலங்கையில் சும்மா இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
121

நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் செயலற்றவராக சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் சும்மா இருப்போர் எண்ணிக்கை உயர்வு! காத்திருக்கும் ஆபத்து | Increase Lazy Peoples In Sri Lanka

இதன் காரணமாக அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. வரவிருக்கும் ஏப்ரல் மாதம் செயலில் உள்ள மாதமாக நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோயற்ற சுகாதார அலுவலகம் அந்த மாதத்தில் நிறுவன மட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பதன் மூலம் பல நோய்களைத் தடுக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் சும்மா இருப்போர் எண்ணிக்கை உயர்வு! காத்திருக்கும் ஆபத்து | Increase Lazy Peoples In Sri Lanka