தந்தை செல்வாவின் ஐனன தினம் அனுஷ்டிப்பு

0
104

தந்தை செல்வாவின் 125வது ஐனன தினம் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தை செல்வாவின் ஐனன தினம் அனுட்டிப்பு(Photos) | Father Selva S Sixth Anniversary

மாபெரும் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் சகல உரிமைகளுடனும் முற்று முழுதான சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான பாதையினை வகுப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துச் செயற்பட்ட மாபெரும் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள்.

தந்தை செல்வாவின் ஐனன தினம் அனுட்டிப்பு(Photos) | Father Selva S Sixth Anniversary

தமிழ் மக்களால் “தந்தை செல்வா” என்று பாசத்துடனும், மதிப்புடனும் போற்றப்படுகின்ற ஒரே தலைவர் அவரே. தொலை நோக்குப் பார்வையுடன் தூய்மையான அரசியல் தலைவராக விளங்கிய தந்தை செல்வா  ஒரு தீர்க்கதரிசி ஆவார்.

தந்தை செல்வாவின் ஐனன தினம் அனுட்டிப்பு(Photos) | Father Selva S Sixth Anniversary

அதோடு தந்தை செல்வா அவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசுத் தலைவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தபோதும், மாற்றுக்கட்சித் தலைவர்களாலும் மதிப்போடு நடாத்தப்பட்ட மாண்புமிக்க பெருந்தகையாளராகவே அவர் விளங்கினார்.