கிளிநொச்சியில் விளையாட்டு போட்டியில் இனந்தெரியாதவர்களால் தாக்குதல்!

0
108

கிளிநொச்சி – சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து இனம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலலில் 5 பேர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (30-03-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம், திடீர் என்று நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.  

கிளிநொச்சியில் விளையாட்டு போட்டியில் புகுந்து தாக்குதல் நடத்திய இனம் தெர்யாத நபர்கள்! | Unknown People Attacked Sports Match Kilinochchi

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி உட்பட 5 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை கிராமத்தவர்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் விளையாட்டு போட்டியில் புகுந்து தாக்குதல் நடத்திய இனம் தெர்யாத நபர்கள்! | Unknown People Attacked Sports Match Kilinochchi

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரும் ஏற்கனவே பிரிதொரு குற்ற செயலுடன் தொடர்பு பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலையானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் விளையாட்டு போட்டியில் புகுந்து தாக்குதல் நடத்திய இனம் தெர்யாத நபர்கள்! | Unknown People Attacked Sports Match Kilinochchi