மைத்திரியையும் கோத்தபாயவையும் கொல்ல திட்டமிட்டவர் மீண்டும் பணிக்கு!

0
100

2018 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொல்ல சதி செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மைத்திரி மற்றும் கோட்டாபயவை கொல்ல திட்டம்போட்டவர் மீண்டும் பணிக்கு! | Planned To Kill Maithiri And Gotabhaya

குற்றம் நிரூபிக்கப்படவில்லை

ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நாமல் குமார செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மைத்திரி மற்றும் கோட்டாபயவை கொல்ல திட்டம்போட்டவர் மீண்டும் பணிக்கு! | Planned To Kill Maithiri And Gotabhaya

எனினும், விசாரணைகள் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அண்மையில் அரசாங்கத்தின் உயர்பீடத்திடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதுடன் அதற்கமைய அவரை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.