கொலையுண்ட இளம் திருமணமான பெண்!

0
86

கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட திருமணமான இளம் பெண்ணின் படுகொலை தொடர்பில் மரபணு பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் நேற்று (28) அனுமதி அளித்துள்ளது.

பல்லேகம, எல்லேகட பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸார் விடுத்த கோரிக்கை

இந்த வழக்கு கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட​போது அலவத்துகொட பொலிஸாரினால் மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்துள்ளது. உயிரிழந்த இளம் சிங்கள குடும்பப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொடூரமாக கொலை செய்த சந்தேகநபரான இராணுவச் சிப்பாயின் விந்தணுவே மரபணு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.