முத்தம் பரிமாறும் அதிசய கருவி; இரு வாரங்களில் 3000 பேர் கொள்வனவு!

0
230

சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரிமோட் முத்த சாதனம் கொரோனாவின் போது ஊரடங்கில் பிரிந்திருந்த தம்பதியருக்கு உதவும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலிக்கான் உதடுகள் கொண்ட இந்த கருவி, மோஷன் சென்சார் மூலம் ஒருவர் தரும் முத்தத்தை பதிவு செய்து ஆப் மூலம் கனெக்ட் ஆகியுள்ள மற்றொரு பயனருக்கு அனுப்புகிறது.

இரு வாரங்களில் 3000 பேர் கொள்வனவு

தொலைதூரத்தில் வசிக்கும் காதலனுக்கோ காதலிக்கோ வீடியோ கால் பேசும் போது இந்த கருவியின் உதவியுடன் முத்தத்தை நிஜமாக தரும் அனுபவத்தை ஏற்படுத்த முடியும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிகின்றனர்.

முத்தத்தை பரிமாறும் அதிசய கருவி; இரு வாரங்களில் 3000 பேர் கொள்வனவு! | Exchanging A Kiss Mobile App

ஜனவரியில் அறிமுகமான இந்த சாதனத்தை முதல் இரண்டு வாரங்களில் 3000 பேர் வரை வாங்கியுள்ளனராம்.

அதேவேளை ஆப் மூலமாக வீடியோ காலில் பேசும் போது பகிரப்படும் முத்தம் ஆன்லைனில் பகிரப்படும் என்ற கவலையும் எழுகின்றன.

எனினும் இதை கட்டுப்படுத்த விதிமுறைகள் உள்ளன என்கிறது இதை உருவாக்கிய நிறுவனம். ஆனால் தனிநபர்கள் இதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை முழுமையாக கண்காணிக்க முடியாது எனவும் இதை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளதாம்.