நபரொருவரின் கைகளை வெட்டி எடுத்துச்சென்ற நபர்! இலங்கையில் சம்பவம்..

0
99

மொறட்டுவையில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன்  சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் அவரை கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நபரொருவரின் கைகளை வெட்டி எடுத்துச்சென்ற நபர்! பகீர் சம்பவம் | A Man Cut Off Someone S Hands In Sri Lanka

இச்சம்பவம் 21-03-2023 மொரட்டுவை – கொரலவெல்ல பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது கைகளைத் துண்டித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் மொரட்டுவை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் துண்டிக்கப்பட்ட கை பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நபரொருவரின் கைகளை வெட்டி எடுத்துச்சென்ற நபர்! பகீர் சம்பவம் | A Man Cut Off Someone S Hands In Sri Lanka

இவ்வாறு எடுத்துசெல்லப்பட்ட கை பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.