14 வயது மாணவி துஷ்பிரயோகம்; வவுனியாவில் சம்பவம்

0
106

14 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சிறுமி வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது இளைஞர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி சம்பவம் தொடர்பில் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பெற்றோர் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியாவில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் | Youth Molested A 14 Year Old Student In Vavuniya

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரான இளைஞரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.