ஞானக்கா மகளின் வீட்டில் கொள்ளை

0
328

அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என்ற பெண்ணின் மகளின் வீட்டில் 80 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஞானக்காவின் மகளின் கணவர் அனுராதபுரம் பொலிஸில் தலைமையகத்தில் இந்தத் திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் திட்ட முகாமையாளரான இவர், வீட்டில் உள்ள அறையொன்றின் அலமாரியில் இருந்த 650,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருடப்பட்ட பணம் மற்றும் தங்கப் பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என அவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலமாரியில் மூன்று பெட்டிகளில் தங்கப் பொருட்கள் இருந்தன. அதில் சுமார் 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 ஜோடி வைரம் பதித்த காதணிகள், சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு வைரம் பதித்த மோதிரங்கள் மற்றும் சுமார் 09 இலட்சம் ரூபா பெறுமதியான வைரம் பதித்த இரண்டு வளையல்கள் உட்பட சுமார் 48 இலட்சம் ரூபா பெறுமதியான வைரக்கற்கள் பதிக்கப்பட்ட 03 தங்கத் தகடுகள் உட்பட மேலும் பல நெக்லஸ்கள், வளையல்கள், பதக்கங்கள், மோதிரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

23ஆம் திகதி நடைபெறவுள்ள நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றவர் அவர்கள் நேற்று முன்தினம் மாலை அலமாரியில் இருந்த தங்கப் பொருட்களை சோதனையிட்ட போது பணத்துடன் தங்கப் பொருட்களும் காணாமல் போயுள்ளதனை அவதானித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் தனது மனைவி இந்த தங்கப் பொருட்களில் சிலவற்றை அணிந்துகொண்டு கலந்துகொண்டதாகவும், அன்றைய தினம் அந்த தங்கப் பொருட்கள் அலமாரியில் இருந்ததாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்த திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனமை தொடர்பில் பணிப்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் சுமார் 06 வருடங்களாக குறித்த வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் எனவும் திடீரென அண்மையில் வீட்டில் இருந்து சென்றவர் திரும்பிவரவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.