இலங்கையில் 41 இலட்சம் குடும்பங்களுக்கு நேர்ந்த நிலை!

0
169

தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் 41 இலட்சம் குடும்பங்களுக்கு நேர்ந்த நிலை; வெளியான ஆய்வு அறிக்கை | What Happened To 41 Lakh Families In Sri Lanka

இந்நிலையில் இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவுக்காக பயன்படுத்தியதாகவும் மேலும் 35 வீதமான குடும்பங்கள் சேமித்த பணத்தை அல்லது கடனை செலுத்த தவறியதன் மூலம் அப்பணத்தை கொண்டு உணவு தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் எரிபொருள் தேவையான ஜனவரியில் 11 வீதத்திலிருந்து 6 வீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பொருட்களின் தேவையானது 87 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.