நீருக்கடியில் 100 நாட்கள் வாழ முடிவு; அபாயகரமான சோதனை

0
279

அமெரிக்காவில் தனது உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள, நபர் ஒருவர் நீருக்கடியில் 100 நாட்கள் வாழ முடிவு செய்துள்ளார்.

தென் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜோ டிடுரி (Joe Dituri), மார்ச் 1 அன்று இந்த அசாதாரண பரிசோதனையைத் தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் டாக்டர் டீப் சீ (Dr Deep Sea) என்றும் அழைக்கப்படும் அவர், உயிரியல் ஆய்வுக்காக கடலைத் தனது ‘வாழ்விடமாக’ மூன்று மாதங்களுக்கு மாற்ற முடிவு செய்தார்.

இவ்வாறு செய்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. “கடல் சூழலை புத்துயிர் பெறுவதற்கான புதிய வழிகளை” தேடுவதற்காக டிடுரி ஒரு பரிசோதனையை மேற்கொண்டு வருவதாக பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முனைவர் பட்டம் பெற்ற டிடூரி, “மக்களுக்கு ஏற்படும் எண்ணற்ற நோய்களைத் தடுக்கக்கூடிய மருத்துவ தொழில்நுட்பத்தையும் சோதிப்பார்.” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவர் நீருக்கடியில் 30 அடி ஆழத்தில், 100 நாட்களுக்கு செய்ய முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நெப்டியூன் 100’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசோதனைக்காக, ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படைத் தளபதியாக இருந்து பேராசிரியராக மாறிய டிடூரி தனிமையில் வாழ்வார்.

ஒரு உளவியலாளரும் மனநல மருத்துவரும், நீட்டிக்கப்பட்ட விண்வெளிப் பயணத்தைப் போன்ற சூழலில் அவர் அனுபவிக்கும் விளைவுகளை கண்காணிப்பார்கள்.

இந்த சோதனை நிறைவடைந்தால், “நிலத்தில் உணரப்பட்ட அழுத்தத்தை விட 1.6 மடங்கு சுற்றுப்புற அழுத்தத்தில் நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் ” என்ற உலக சாதனையை டிடுரி முறியடிப்பார். தென் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மற்றொரு அறிக்கையில், “மனித உடல் தண்ணீருக்கு அடியில் நீண்ட காலம் இருந்ததில்லை, எனவே நான் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவேன்.

இந்தப் பயணம் எனது உடலைப் பாதிக்கும் ஒவ்வொரு வழியையும் இந்த ஆய்வு ஆராயும், ஆனால் எனது பூஜ்ய கருதுகோள் அதிகரித்த அழுத்தம் காரணமாக எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.., எனவே, நான் சூப்பர்-மனிதனாக வெளியே வரப் போகிறேன் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்!” என்று டாக்டர் டீப் சீ கூறியுள்ளார்.