மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்! சூளுரை விடுத்த மொட்டுக் கட்சி

0
107

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) மக்கள் ஆதரவு மூலமே மீண்டும் பிரதமராக்குவோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்தார்.

இன்றைய தினம் (20-03-2023) மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவோம்! சூளுரை விடுத்த மொட்டுக் கட்சி | Let S Make Mahinda Prime Minister Again Podujana

மேலும் கூறியதாவது,

“மஹிந்தவைப் பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால், அவ்வாறான எந்தவொரு முயற்சியும் தற்போது இடம்பெறவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவோம்! சூளுரை விடுத்த மொட்டுக் கட்சி | Let S Make Mahinda Prime Minister Again Podujana

தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார். அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். மக்கள் ஆதரவு மூலமே மஹிந்தவைப் பிரதமராக்குவோம்” – என்றார்.