இரகசியமான இலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் – தகவல் கோரும் கம்மன்பில

0
61

கடந்த மாதம் அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவொன்று இலங்கை வந்தமை தொடர்பில் விளக்கம் கோரக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமா உதய கம்மன்பில, குடிவரவு திணைக்களத்தின் தகவல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு C17 Globemaster வகை விமானங்களில் இலங்கை வந்த அமெரிக்கக் குழுவினர் தொடர்பில் 08 விடயங்கள் தொடர்பிலான தகவல்களைக் கோரி உதய கம்மன்பில கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்த விமானங்களில் வந்தவர்கள் யார்? அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் வில்லியம் சிபான் குறித்து குடிவரவு அதிகாரிகளால் சோதனையிடப்பட்டதா? என்று கேட்டுள்ளார்.

மேலும், வந்தவர்களின் கடவுச்சீட்டில் குடிவரவு அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டதா? என்பது உட்பட தனது கடிதத்தில் மேலும் 08 விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் வினவியுள்ளார்.