200 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

0
214

டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருதது தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்.

தேர்தல் கோரும் அரசியல்வாதிகள்

ஜனாதிபதியின் காலை இழுக்காமல் ஆதரித்தால் பிரச்சினைகளை தீர்த்து மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவார்.

இந்த நேரத்தில் நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை. அரசியல்வாதிகள் தான் தேர்தலைக் கேட்கின்றனர்.

200 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து வெளியான தகவல் | Dollar Price In Sri Lanka Today Situation

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி அரசாங்க கொடுப்பனவு பெறும் 8000 பேரை நியமிப்பது இந்த நேரத்தில் நாட்டுக்கு சுமை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.