முன்னாள் எம்.பி.யின் உயிரை பறித்த விபத்து

0
238

விபத்தில் சிக்கிய அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலநறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதுண்டதனாலேயே இந்த இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

விபத்தில் படுகாயமடைந்த பொடியப்பு பியசேன கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.