கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

0
73

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டி அருகே இடம்பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரியில் தட்டத்தில் கிராமத்தை சேர்ந்த கந்தன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சமகாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி! திடுக்கிடும் சம்பவம் | Wife Killed Her Husband Was Disturb Her Boy Friend

இவ்வாறான நிலையில் கந்தனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதன்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளார். அதில் சக்தியும், சந்தியாவும் அடிக்கடி தொலைபேசியில் பேசியது தெரியவந்ததுள்ளது.

இதனை கண்டு கோபமடைந்த கணவன், மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும், அதனை கண்டுகொள்ளாத சந்தியா குறித்த இளைஞனுடன் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்.  

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி! திடுக்கிடும் சம்பவம் | Wife Killed Her Husband Was Disturb Her Boy Friend

இந்நிலையில், நேற்று முன் தினம் (14-03-2023) கந்தன் தான் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியில் கிளம்பியுள்ளார்.

இதனையடுத்து வழக்கம் போல் கணவர் வேலைக்கு சென்று விட்டார் வீட்டிற்கு வா என சந்தியாவும் அந்த இளைஞனை அழைத்துள்ளார்.

இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்த நிலையில், இரவு 11 மணியளவில் கந்தன் வீடு திரும்பியுள்ளார்.

இருவரும் வீட்டில் இருப்பதை கண்ட கந்தனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. உடனே சந்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றியதும் சந்தியாவும், சக்தியும் ஒன்றாக சேர்ந்து கந்தன் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பலமாக தாக்கியுள்ளனர்.  

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி! திடுக்கிடும் சம்பவம் | Wife Killed Her Husband Was Disturb Her Boy Friend

தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் விழுந்துள்ளார். பின்னர் சந்தியா இது தொடர்பில் சக்தியின் நண்பரிடம் கணவர் வழுக்கி விழுந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் சந்தியா உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நண்பர் வசந்த், கந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்த் நண்பரின் மனைவியுடன் சக்தி இருப்பதால் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

தொடர்ந்து பொலிஸார் இருவரையும் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.