QR குறியீடு தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…

0
381

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் குறியீடு முறையானது வினைத்திறனாக இல்லை என மத்திய வங்கியின் c அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி வரை எரிபொருள் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும் இது நாட்டின் பொருளாதாரம் தீவிரமாக சுருங்குவதையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கோட்டா முறைக்கு வழங்கப்படும் தொகையை வாங்கும் பொருளாதாரத் திறன் கூட மக்களிடம் இல்லை என்றும் எனவே அந்த அமைப்பு இனி இயங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த காலங்களில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோலின் பயன்பாடு 35% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

QR குறியீடு தொடர்பில் வெளிவந்த கருத்து! | Comment On Qr Code

இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.