உதவிக்கு சென்றுபோது கொடூரமாக கொல்லப்பட்ட பெண்! இலங்கையில் பகீர் சம்பவம்

0
61

குருநாகல் – பொல்பிதிகம நிகதலுபத பிரதேசத்தில் உதவிக்கு சென்ற பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய கத்தி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்தப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும் அவரது மகளும் நபர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

உதவிக்கு சென்றுபோது கொடூரமாக கொல்லப்பட்ட பெண்! இலங்கையில் பகீர் சம்பவம் | Woman Was Killed When She Went To Help Sri Lanka

இந்த மோதலை கட்டுப்படுத்த பெண்ணொருவர் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் குறித்த பெண்ணை கூரிய கத்தியொன்றில் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதவிக்கு சென்றுபோது கொடூரமாக கொல்லப்பட்ட பெண்! இலங்கையில் பகீர் சம்பவம் | Woman Was Killed When She Went To Help Sri Lanka

இவ்வாறான நிலையில் அந்த பெண் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், காயமடைந்த தந்தை மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.