பெண்வைத்தியரை கத்தியால் தாக்கிய உள்ளூராட்சி வேட்பாளரான கணவர்!

0
69

பெண் வைத்தியர் ஒருவரை அவரது கணவர் கத்தியால் வெட்டி அப் பெண் பலத்த காயங்களுக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் என கம்பஹா நுங்கமுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்வைத்தியரை கத்தியால் தாக்கிய உள்ளூராட்சி வேட்பாளரான கணவர்! | Woman Doctor Attacked By Her Husband With A Knife

முதுகு மற்றும் கைகளில் காயங்கள்

வைத்தியரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும் வைத்தியரின் கணவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் என பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியரின் முதுகு மற்றும் கைகளில்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியில் காணப்பட்ட தொலைபேசி இலக்கமொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் சந்தேகநபரை கைதுசெய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.