அடுத்த வருடம் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்!

0
261

அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருகின்றதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

பசிலுடன் பேச்சு

இது தொடர்பில் ஓரிரு மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவை அழைத்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது

ரணில் விக்கிரமசிங்கவைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் இருவரும் மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பஸிலிடம் கோரி இருந்தனர்.

2024 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்! | Srilanka Presidential Election In January 2024

மொட்டு – ஐ.தே.க. வாக்குகளையும், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் – முஸ்லிம் வாக்குகளையும் – மலையக மக்களின் வாக்குகளையும் வைத்து வெற்றி பெறலாம் என்று வஜிர அந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான  நிலையில்  ரணிலைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குப் பஸிலும் பச்சைக்கொடி காட்டியிருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.