11 வயது பாடசாலை மாணவனுக்கு சக மாணவர்களால் நேர்ந்த கொடூரம்!

0
60

11 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது

சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களும் அதே பாடசாலையில் பத்தாம் வருட மாணவர்கள் எனவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர் அதே பாடசாலையின் 6ஆம் வருட மாணவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இந்த மாணவனை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

11 வயது பாடசாலை மாணவனுக்கு சக மாணவர்களால் நேர்ந்த கொடூரம்! | Students Molested An 11 Year Old Schoolboy

சந்தேகத்திற்குரிய இரு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.