விமானப்படை தாக்குதல் பிரிவில் முதல் பெண் அதிகாரி நியமனம்!

0
607

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் முறையாகப் பெண் தளபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இந்திய விமானப் படையின் மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது இந்த மேற்குப் படைப் பிரிவு. கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக ஷாலிஸா தாமி பணிக்கு சோ்ந்தார்.

2,800 மணி நேரம் பல்வேறு விமானங்களில் பறந்துள்ள இவா், விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளா் ஆவாா். இந்நிலையில் மேற்கு படைப் பிரிவின் ஹெலிகாப்டா் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாகப் பணியாற்றியுள்ளாா்.

சிறப்பான பங்களிப்பிற்காக இரண்டு முறை தலைமை தளபதியின் விருதைப் பெற்றுள்ளாா். 2016-ஆம் ஆண்டு முதல் விமானப் படையின் முக்கிய போா் விமானங்களுக்கு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

தற்போது, 1,875 பெண் அதிகாரிகள் விமானப் படையில் பணியாற்றி வருகின்றனா். இதன்போது படைத் தளபதி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கட்டளையிடும் பதவிகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் நோக்கில் ஷாலிஸா தாமி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.