பட்டுப் புடவையில் ஆளே மாறிய ஜனனி! வைரல் வீடியோ

0
607

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசனில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமாகியவர்தான் இலங்கைப் பெண் ஜனனி. இவர் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருந்தவர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் கலந்து கொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என பல டாஸ்க்கிலும் ஜனனி சிறப்பாக விளையாடியுள்ளார்.

பட்டு புடவையில் ஆளே மாறிய இலங்கைப் பெண் ஜனனி! வைரல் வீடியோ | Bigg Boss Sri Lankan Girl Janany Silk Saree Video

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் ஜனனிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நடிகர் விஜயை வைத்து லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் ஜனனி நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

பட்டு புடவையில் ஆளே மாறிய இலங்கைப் பெண் ஜனனி! வைரல் வீடியோ | Bigg Boss Sri Lankan Girl Janany Silk Saree Video

மேலும், தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமத்திரமின்றி தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள், காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றது.