காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்..கவனமாக இருங்கள்

0
295

பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் காலையுணவை விரும்புவதில்லை.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு தற்போது இருக்கு பரபரப்பான சூழ்நிலையில் காலை உணவை தவிர்க்கின்றனர்.

இப்படி ஒரு நிலைமையில் உலகளாவிய ரீதியில் காலையுணவை தவிர்க்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிக எடையுள்ளவர்கள் ‘உடல் எடையைக் குறைக்கிறேன்’ என்று கூறிக் கொண்டு காலை உணவைத் தவிர்க்கிறார்கள்.இன்னும் சிலர் ‘நேரமில்லை’ என்பார்கள்.

ஆனால் ஒரு மனிதனுக்கு காலையுணவு என்பது அன்றைய நாளை துவங்க ஒரு சிறந்த ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் காலையுணவை தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

காலையுணவை தவிர்ப்பவரா நீங்க?

1. பொதுவாக காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இவ்வாறு காலையில் சாப்பிடாவிட்டால் உடலில் இருக்கும் குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் மங்கலடைகிறது.

2. உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், பகல் வேளைகள் அதிக பசியால் அளவுக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு இருக்கும் போது உடல் எடை அதிகரிக்குமே தவிர உடல் எடை குறையாது. இது மட்டுமல்ல இதனால் ஏற்படும் பசிக்கு நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிடுவார்கள்.

effects-of-skipping-breakfast

3. காலையுணவு சாப்பிடுவதால் வாய் பகுதியில் இருக்கும் லைஸோசைம் என்ற எச்சில் சுரப்பி வாயில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும்.

மாறாக நாம் காலையில் சாப்பிடாவிட்டால் வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து வாய் துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து விடும்.

4. உடலில் இருக்கும் நோய்களை கட்டுபடுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். இவ்வாறு காலையுணவை தவிர்த்தால் நாட்கள் செல்ல நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்.

5. காலை சாப்பாட்டினால் தான் உடலை இயக்குவதற்கான சக்தி இருக்கும். இதனை தவிர்க்கும் பட்சத்தில் குடற்புண்கள், வயிற்று வலி என பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.